Posts

Showing posts from October, 2022

அழகான மற்றும் மென்மையான சருமம் வேண்டுமா??

Image
இரவில் தயிருடன் சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் தடவி வரலாம். தடவிய பின் சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சரும துளைகளில் அடைந்திருக்கும் அழுக்குகளை நீக்கி சருமத்தை பளிச்சிட வைக்கும். வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் சேர்த்து  நைசாக அரைத்துக் கொள்ளவும். பின் அரைத்த விழுதை முகத்தில் தடவி விடவும். இரண்டு வெள்ளரிக்காய் துண்டுகளை எடுத்து கண்ணின் மேல் வைக்கவும்.இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள சோர்வு நீங்கி முகம் புத்துணர்ச்சி அடையும். கண்களின் மேல் வைப்பதால் கண் குளிர்ச்சி அடைந்து கண்களில் ஏற்படும் சோர்வினை நீக்கும். தூங்குவதற்கு முன்பு தினமும் இவ்வாறு செய்துவந்தால் காலையில் சோர்வு நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும். சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் இதை இரவு நேரத்தில் செய்யாமல் பகல் நேரத்தில் செய்வது சிறந்தது. வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் பால் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம். ரோஸ் வாட்டரில் சிறிது பா...